தொடர்புடைய செய்திகள்
- முகேஷ் அம்பானி குடும்பத்திற்கு பாதுகாப்பு தொடர அனுமதி- உச்ச நீதிமன்றம்
- சென்னை செஸ் ஒலிம்பியாட் : பாதுகாப்பு பணியில் 4000 போலீசார்
- இன்று மாணவி உடல் தகனம்: மருத்துவமனை முதல் மயானம் வரை போலீஸ் பாதுகாப்பு!
- பிறந்த நாளிலும் மாணவர்கள் சீருடையில்தான் வரவேண்டும்- சமூகப் பாதுகாப்புத்துறை
- யஷ்வந்த் சின்ஹாவுக்கு Z பிரிவு பாதுகாப்பு!!
பாதுகாப்பு பணியில் இருந்த ராணி 'மோப்ப நாய்' ஓய்வு
சென்னை விமான நிலையத்தில் 10 ஆண்டுகளாக பாதுகாப்பு பணியில் இருந்த ராணி மோப்ப நாய் ஓய்வு பெற்றது.
சென்னை விமான நிலையத்தில் டிடெக்டர், பாதுகாப்பு வீரர்கள் போன்றோர் பாணிகாப்புப் பணியில் இருந்தபோதிலும், அங்கு வெடி பொருட்கள், ரசாயனங்கள், போதைப்பொருட்கள் போன்றவற்றை கண்டறிய மோப்ப நாய்கள் பயன்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை என சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த ராணி என்ற மோப்ப நாய் வயது மூப்பின் காரணமாக நேற்று ஓய்வு பெற்றது.
இத்தனை ஆண்டுகளாகப் பணியாற்றி வந்த ராணியின் பணியைக் கவுரவிக்கும் விதத்தில்,அதற்கு ஓய்வு பெறும் நிகழ்ச்சியை மத்திய தொழிற்படை அதிகாரிகள் நடத்தினர். இதுகுறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
