திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 22 ஜூலை 2022 (17:54 IST)

சென்னை செஸ் ஒலிம்பியாட் : பாதுகாப்பு பணியில் 4000 போலீசார்

Chess
சென்னை அருகே மகாபலிபுரத்தில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியின் பாதுகாப்புக்காக 4000 போலீசார் ஈடுபடுவார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 
ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடைபெற்று வரும் 28ஆம் தேதி முதல் நடைபெற உள்ள நிலையில் இந்த போட்டிக்கு போதுமான பாதுகாப்பு அளிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது 
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி இந்த நிகழ்வுக்கு 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றும் 100 ஆய்வாளர்கள் 380 எஸ்.ஐ.க்கள் 3520 காவலர்கள் 17 நாட்கள் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள உள்ளனர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது
 
மேலும் ஒரு காவலருக்கு ரூபாய் 250 வீதம் உணவுப்படியாக 1.70 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது