வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Modified: செவ்வாய், 3 ஜனவரி 2023 (16:16 IST)

ரங்கராஜ் பாண்டேவின் தந்தை மறைவிற்கு முதல்வர் நேரில் அஞ்சலி!

ரங்கராஜ் பாண்டேவின் தந்தை மறைவிற்கு முதல்வர் நேரில் அஞ்சலி!
 
சாணக்யா என்ற  ஊடகத்தின் சி.இ.ஓவும், பத்திரிக்கையாளருமான ரங்கராஜ் பாண்டேவின் தந்தை ஊவே.,ரகுநாதாசாரியார் (84) வயது மூப்பில் காரணமாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில்  நேற்றிரவு காலமானார்.
 
அவரது மறைவுக்கு பிரபல பத்திரிக்கையாளர்கள், ஊடகவியலாளர்கள், திரை நட்சத்திரங்கள் , அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் மற்றும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
 
இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி ரங்கராஜ் பாண்டேவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்