திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 26 டிசம்பர் 2022 (15:57 IST)

ரங்கராஜ் பாண்டேவை அடுத்து சினிமாவுக்கு வரும் ஊடகவியலாளர்!

சிவகார்த்திகேயன் ப்ரின்ஸ் படத்துக்கு பிறகு மாவீரன் படத்தில் நடித்து வருகிறார்.

சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படப்பிடிப்பின் போது இயக்குனர் மடோன் அஸ்வினுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே கருத்து மோதல் ஆரம்பம் முதலே உருவாகி வந்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து சமீபத்தில் மோதல் உச்சத்தை எட்டி படப்பிடிப்பே நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இருவருக்கும் இடையே சமாதானம் ஏற்பட்டு தற்போது ஷூட்டிங் மீண்டும் சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் ஊடகவியலாளர் முக்தார் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.