வியாழன், 19 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 4 ஆகஸ்ட் 2024 (14:27 IST)

17 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.! தமிழக அரசு அதிரடி உத்தரவு.!!

assembly
தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.    
 
தமிழக காவல்துறையில் நிர்வாக வசதிகளுக்காக அவ்வப்போது பணியிட மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று ஐபிஎஸ் அதிகாரிகள் 17 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
 
அதிகாரிகளின் விவரங்கள்:
 
தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் தலைவராக இருந்த ஏ.கே.விஸ்வநாதன் ஐபிஎஸ் ஓய்வு பெற்று உள்ள நிலையில், அவருக்கு பதிலாக  சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபியாக இருந்த சைலேஷ் குமார் யாதவ் நியமிக்கப்பட்டு உள்ளார்.
 
சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவின் ஐஜி ஆர்.தினகரன் அவர்கள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் கூடுதல் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
 
தலைமை காவல் படைப்பிரிவின் ஐஜியாக இருந்த டி.செந்தில் குமார் மேற்கு மண்டல ஐஜியாக நியமனம்.
 
மேற்கு மண்டல ஐஜியாக இருந்த கே.புவனேஸ்வரி ஐபிஎஸ், தலைமை காவல் படைப்பிரிவு ஐஜியாக நியமனம்.
 
தலைமை காவல் படைப்பிரிவு ஐஜி ரூபேஷ் குமார் மீனா ஐபிஎஸ், திருநெல்வேலி மாநகர காவல் ஆணையராக நியமனம்.
 
நுண்ணறிவு பிரிவு ஐஜி டாக்டர் மஹேந்திர குமார் ரத்தோட் ஐபிஎஸ், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் அமைப்புக்கு இடமாற்றம்.
 
சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் ஐஜி டாக்டர் பி.சாமுண்டீஸ்வரி ஐபிஎஸ், காவல் தலைமை பிரிவின் ஐஜியாக நியமனம்.
 
குற்றிப்பிரிவு ஐஜி ஏ.ராதிகா ஐபிஎஸ், மத்திய குற்றப்பிரிவின் கூடுதல் ஆணையராக நியமனம்.

மத்திய குற்றப்பிரிவின் கூடுதல் ஆணையராக இருந்த டாக்டர் பி.கே.செந்தில் குமாரி ஐபிஎஸ், குற்றப்பிரிவு ஐஜியாக இடமாற்றம்.
 
காவல் நல்வாழ்வு பிரிவின் ஐஜி நஜுமல் ஹோடா, காவல்துறை நவீனமயமாக்கல் பிரிவு ஐஜியாக இடமாற்றம்.
 
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையராக இருந்த டாக்டர் பா.மூர்த்தி திருநெல்வேலி டிஐஜியாக நியமனம்.
 
திருநெல்வேலி சரக டிஐஜியாக இருந்த ப்ரவேஷ் குமார் ஐபிஎஸ், பெருநகர சென்னை மாநகர வடக்கு பிரிவின் சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையராக நியமனம்.
 
பெருநகர சென்னை மாநகர வடக்கு பிரிவின் சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையராக இருந்த அபிஷேக் தீக்‌ஷித் ரயில்வே காவல் பிரிவின் டிஐடியாக நியமனம்.
 
திண்டுக்கல் சரக டிஐஜி டாக்டர் அபினவ் குமார் ஐபிஎஸ், ராமநாதபுரம் சரக டிஐஜியாக நியமனம்.
 
ராமநாதபுரம் சரக டிஐஜி எம்.துரை ஐபிஎஸ், காவல்துறை நல்த்துறைக்கு இடமாற்றம்.
 
சென்னை போக்குவரத்து காவல்துறையின் இணை ஆணையர் என்.தேவராணி ஐபிஎஸ், வேலூர் சரக டிஐஜியாக நியமனம்.
 
வேலூர் சரக டிஐஜி சரோஜ் குமார் தாகூர் ஐபிஎஸ், சென்னை சட்டம் ஒழுங்கு இணை ஆணையராக நியமனம்.