1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 29 மார்ச் 2021 (20:14 IST)

பாஜக வேட்பாளருக்காக தீவிர பிரச்சாரம் செய்யும் சிவாஜி கணேசன் மகன்!

பாஜக வேட்பாளருக்காக தீவிர பிரச்சாரம் செய்யும் சிவாஜி கணேசன் மகன்!
தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் இணைந்து உள்ள பாஜகவுக்கு 20 தொகுதிகள் கிடைத்துள்ளது என்பதும் இந்த 20 தொகுதிகளில் குறைந்தபட்சம் 10 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற தீவிர முயற்சியில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஆயிரம்விளக்கு தொகுதியில் குஷ்பு, அரவக்குறிச்சி தொகுதியில் அண்ணாமலை, கோவை தெற்கு தொகுதியில் வானதி, நெல்லை தொகுதியில் நயினார் நாகேந்திரன், தாராபுரம் தொகுதிகளில் முருகன் ஆகியோர்களின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவும் இன்னும் சிலரையும் வெற்றிபெற வைக்க வேண்டும் என்பதற்காக பாஜக தீவிரமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் தமிழகம் முழுவதும் பாஜக போட்டியிடும் தொகுதிகளில் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்/ அந்த வகையில் விருதுநகர் சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் பாண்டுரங்கன் அவர்களுக்கு ஆதரவாக சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் அவர்கள் தாமரை சின்னத்தில் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார் இது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது