1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 6 ஜூலை 2017 (15:33 IST)

எல்லை தாண்டும் தமிழக மீனவர்களுக்கு ரூ.20 கோடி வரை அபராதம்

இலங்கை கடல் எல்லை பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடித்தால் ரூ.2 கோடி முதல் ரூ.20 கோடி வரை அபராதம் விதிக்கும் மசோதாவை இலங்கை அரசு தாக்கல் செய்துள்ளது.


 

 
எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்ந்து வருகிறது. அவ்வப்போது இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். தமிழக மீனவர்களிடம் இருந்து கைப்பற்றப்படும் படகுகளையும் விடுவிப்பதில்லை. 
 
இந்நிலையில் இலங்கை அரசு தமிழக மீனவர்களுக்கு எதிராக கடுமையான மசோதாவை தாக்கல் செய்துள்ளது. இலங்கை மீன் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரா திருந்தங்கள் செய்யப்பட்ட கடற்தொழில் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், எல்லை தாண்டி மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு ரூ.2 கோடி முதல் ரூ.20 கோடி வரை அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.