திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 11 ஜனவரி 2018 (07:29 IST)

எங்களிடம் 98 எம்.எல்.ஏக்கள் இருந்தால் நடப்பதே வேறு: ராமதாஸ்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் தமிழகத்தில் ஆளும் அரசு பல்வேறு குழப்பங்களை செய்து வருவதாகவும், நிலையற்ற, இயங்காத அரசாக இருந்து வருவதாகவும், மத்திய அரசுக்கு ஜால்ரா போடும் அரசாக இருந்து வருவதாகவும் அரசியல் கட்சிகளும், அரசியல் விமர்சகர்களும் கடந்த பல மாதங்களாக விமர்சனம் செய்து வருகின்றனர்

ஆளும் கட்சிதான் இப்படி என்றால் மு.க.ஸ்டாலின் தலைமையிலான எதிர்க்கட்சியும் ஆக்கபூர்வமான செயல்பாடுகளில் ஈடுபடவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. ஸ்டாலின் நினைத்திருந்தால் இந்த ஆட்சியை எப்போதோ வீட்டுக்கு அனுப்பியிருக்கலாம் என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது

இந்த நிலையில் திமுக மற்றும் ஸ்டாலின் செயல்பாடுகள் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியபோது, 'திமுக பக்கம் 98 எம்எல்ஏக்கள் இருந்தும் எந்த செயல்பாடும் இல்லை; திமுக எதிர்க்கட்சி என்றால் மக்கள் சிரிக்கும் நிலை உள்ளது, எங்களிடம் 98 எம்எல்ஏக்கள் இருந்திருந்தால் வேறு மாதிரியாக இருக்கும் என்று கூறியுள்ளார்