1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Dinakaran supporter chinnasamy arrested

தினகரன் ஆதரவு முன்னால் எம்.எல்.ஏ திடீர் கைது! காரணம் என்ன?

dinakaran
கோவையை சேர்ந்த முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ சின்னச்சாமியை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் திடீரென கைது செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ சின்னச்சாமி அதிமுக தொழிற்சங்க பேரவை செயலாளராக இருந்தபோது ரூ.8 கோடியை கையாடல் செய்ததாக சங்கத்தின் சார்பில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 
அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளராக இருந்த சின்னசாமி தற்போது டிடிவி தினகரனின் கட்சியான அமமுகவில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
கேரள மக்களுக்கு இலவச பாஸ்போர்ட்: மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அதிரடி அறிவிப்பு