1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : திங்கள், 11 செப்டம்பர் 2023 (10:15 IST)

ராமேஸ்வரத்தில் திடீரென உள்வாங்கிய கடல்.. ஆராய்ச்சியாளர்கள் கூறுவது என்ன?

தூத்துக்குடி இராமேஸ்வரம் உள்பட ஒரு சில கடல் பகுதிகளில் திடீர் திடீரென கடல் உள்வாங்கும் சம்பவம் நடந்து வருகிறது. 
 
அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் இன்று காலை திடீரென கடல் உள்வாங்கியதால் அந்த பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில்  சுமார் 50 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியதால் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பணிகள் அச்சமடைந்தனர்
 
இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறும் போது காலநிலை மாற்றத்தால் கடல் உள்வாங்கி இருக்கலாம் என்று தெரிவித்தனர்,.
 
Edited by Mahendran