1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. TTD decide to build new building for devotees

திருப்பதியில் 20,000 பக்தர்கள் தங்கும் வகையில் மையங்கள்.. ரூ.600 கோடி செலவில் அமைக்க முடிவு

திருப்பதி
திருப்பதியில் 600 கோடி செலவில் 20 ஆயிரம் பேர் தங்கும் மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 
 
திருப்பதியில் தற்போது ஏற்கனவே பல பக்தர்கள் தங்கும் மையம் இருக்கும் நிலையில் புதிதாக இரண்டு சத்திரங்களை இடித்துவிட்டு 600 கோடி செலவில் 20,000 பேர் தங்கும் வகையில் அதிநவீன வசதிகளுடன் கூடிய தங்கம் நிலையங்கள் அமைக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது  
 
மேலும் இந்த ஆண்டு இரண்டு பிரமோற்சவங்கள் நடைபெற உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.  அதேபோல் 413 பூசாரிகள் மற்றும் பிற காலியிடங்களை நிரப்ப மாநில அரசின் ஒப்புதலையும் தேவஸ்தானம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
பாரத் என பெயர் மாற்றினால் ரூ.1,43,000 கோடி செலவாகும்: அதிர்ச்சி தகவல்..!