1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 1 டிசம்பர் 2020 (12:22 IST)

டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு கனடா ஆதரவளிக்கும்! – ஜஸ்டின் ட்ரூடோ அறிவிப்பு!

டெல்லியில் மத்திய அரசின் வேளாண் மசோதாவுக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ ஆதரவு தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் வேளான் மசோதாவுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் வலுவடைந்துள்ளது. பஞ்சாப், ஹரியான உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இன்று மத்திய வேளாண் துறை அமைச்சர் விவசாய சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்நிலையில் டெல்லிக்குள் பல்வேறு மாநில விவ்சாயிகளும் போராட்டத்தில் கலந்து கொள்ள வருவதால் எல்லைகள் மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லி போராட்டம் குறித்து வீடியோ வெளியிட்டுள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ “இந்தியாவில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் குறித்த செய்திகளை என்னால் கண்டுகொள்ளாமல் இருக்க முடியவில்லை. இந்த இக்கட்டான சூழலில் நமது குடும்பம் மற்றும் நண்பர்கள் குறித்து நாம் கவலைக்கொண்டுள்ளோம். அமைதியான வழியில் உரிமைக்காக போராடுபவர்களுக்கு கனடா என்றும் துணை நிற்கும் என்பதை உங்களுக்கு நினைவுப்படுத்துகிறேன். எங்களது இந்த கவலை குறித்து இந்திய அதிகாரிகளின் பார்வைக்கும் கொண்டு சென்றுள்ளோம். நாம் இணைந்து செயலாற்ற வேண்டிய தருணம் இது” என்று கூறியுள்ளார்.

கனடாவில் இந்தியாவிலிருந்து சென்ற சீக்கியர்கள் அதிகம் வாழும் நிலையில் கனடாவின் பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சிங் டெல்லி போராட்டம் குறித்து பேசியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.