1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 23 ஏப்ரல் 2020 (15:10 IST)

இங்கிலாந்து இளவரசருக்கே கொரோனாவாம்! உஷாரா இருங்க! – ராமதாஸ் அறிவுரை!

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இரண்டாயிரத்தை நெருங்கி வருகிறது. இந்நிலையில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அவசியமின்றி வெளியே வரும் நபர்களை போலீஸார் கைது செய்து பின்னர் விடுதலை செய்து வருகின்றனர். இதுவரை தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக 1 லட்சத்திற்கும் அதிகமான நபர்கள் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மக்கள் தேவையின்றி வெளியே திரிவதை தவிர்க்குமாறு அடிக்கடி ட்விட்டரில் தெரிவித்து வரும் பாமக நிறுவனர் ராமதாஸ் “ஊரடங்கை உதாசீனப்படுத்தி ஊர்சுற்றும் இளைஞர்களுக்கும், மக்களுக்கும் ஓர் வேண்டுகோள்: உலகையே ஒரு குடையின்கீழ் கொண்டு வந்து ஆண்ட இங்கிலாந்தின் இளவரசரும், பிரதமரும் கூட கொரோனாவால் பாதிக்கப்பட்டு போராடி உயிர்பிழைத்துள்ளனர். இதை அனைவரும் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும்! “ என்று தெரிவித்துள்ளார்.