வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 5 ஜனவரி 2018 (16:58 IST)

ரஜினி குடிகாரரா?: சர்ச்சை கருத்துக்கு ராமதாஸின் விளக்கம்!

ரஜினி குடிகாரரா?: சர்ச்சை கருத்துக்கு ராமதாஸின் விளக்கம்!

பாமக தலைவர் ராமதாஸ் நேற்று அளித்த பேட்டியில் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கருத்து தெரிவித்த போது இரு குடிமகன்கள் சேர்ந்து கட்சி ஆரம்பிக்கலாம் என கூறினார். இதில் அவர் குடிமகன் என கூறியதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
 
இரு குடிமகன்கள் சேர்ந்து கட்சி ஆரம்பிக்க நினைத்தால் ஆரம்பிக்கலாம் என ராமதாஸ் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ராமதாஸ் தனது விளக்கத்தை அளித்துள்ளார். தான் அந்த அர்த்தத்தில் கூறவில்லை என தெரிவித்தார்.
 
இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், ரஜினி, அரசியல் கட்சி தொடங்க இருப்பதுகுறித்து செய்தியாளர்கள் கருத்து கேட்டபோது, ஏற்கெனவே கூறியிருக்கிறேன், இரு குடிமகன்கள் சேர்ந்து ஒரு கட்சி தொடங்க வேண்டும் என்று நினைத்தால் ஆரம்பிக்கலாம் என்று கூறினேன்.
 
அரசியல் கட்சி தொடங்க, குறைந்தது இருவராவது தேவை என்ற அடிப்படையில்தான் இதைக் கூறினேன். அதில் குடிமகன்கள் என்று நான் குறிப்பிட்டது, இந்தியக் குடிமக்கள் என்ற பொருளில்தான். ஆனால், சில பத்திரிகைகளில் அதைத் தவறான பொருள்படும் வகையில் திரித்ததுடன், சிரித்தபடியே, 2 குடிமகன் என்ற வார்த்தையை அழுத்தமாகக் கூறினார் என்றும் அடைப்புக்குறிக்குள் வெளியிட்டுள்ளனர்.
 
உண்மையில், ரஜினியின் அரசியல் கட்சி குறித்து முதலில் கேள்வி கேட்டபோது, இரு குடிமகன்கள் சேர்ந்து கட்சி தொடங்கலாம் என்று கூறினேன். மீண்டும் அதே கேள்வியை வேறு பொருளில் கேட்டபோது, அதையே மீண்டும் கூறினேன். இதில் அழுத்தம் கொடுத்துக் கூறுவதற்கு எதுவும் இல்லை என்றார்.