திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 22 அக்டோபர் 2020 (12:24 IST)

இவங்க சொல்லவும் மாட்டாங்க.. செய்யவும் மாட்டாங்க! – அதிமுக மீது ராமதாஸ் அதிருப்தி??

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தற்போது தமிழக அரசு குறித்து பாமக ராமதாஸ் பதிவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட தொடங்கியுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கு அமைந்த கூட்டணியே தொடருமா அல்லது புதுக்கூட்டணி அமையுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் தேர்தலில் அதிமுகவுடன் ஆட்சியை பங்கிட்டு கொள்ள பாமக பேசியதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. இந்நிலையில் தற்போது ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் “ஆந்திரத்தில் ஜெகன்ரெட்டி சொன்னதை செய்கிறார்; சொல்லாததையும் செய்கிறார். ஆனால், இங்குள்ள ஆட்சியாளர்கள் மக்களின் கோரிக்கைகள் குறித்து எதையும் சொல்ல மறுக்கிறார்கள். சொன்னாலும் அதை கண்டு கொள்வதில்லை..... செய்யவும் மறுக்கிறார்கள்!” என்று கூறியுள்ளார்.

இதனால் பாமக கோரிக்கைகளுக்கு அதிமுக செவிசாய்க்காததால் பாமக தரப்பில் அதிருப்தி இருப்பதாகவும், அதன் காரணமாக பூடகமாக இவ்வாறு ராமதாஸ் ட்விட்டரில் பதிவிட்டிருக்கலாம் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசிக் கொள்ளப்படுகிறது.