திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : வியாழன், 22 அக்டோபர் 2020 (11:56 IST)

ஒரே நேரத்தில் கொடியேற்ற வந்த அதிமுக – திமுக! – கலவரமானதால் போலீஸார் தடியடி

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் ஒரே சமயத்தில் அதிமுக – திமுக இரு கட்சியினரும் கொடியேற்ற வந்ததால் ஏற்பட்ட அமளியில் போலீஸார் தடியடி நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி விளாத்திக்குளம் பேருந்து நிலையத்தில் போலீஸார் அனுமதியுடன் திமுகவினர் கொடியேற்றும் விழா நடத்தியுள்ளனர். அப்போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் தலைமையில் அதிமுகவினரும் அதே பகுதிக்கு கொடியேற்ற வந்ததால் பரபரப்பு எழுந்துள்ளது. அதிமுகவினருக்கு போலீஸார் அனுமதி மறுக்கவே ஏற்பட்ட தள்ளுமுள்ளால் போலீஸார் தடியடி நடத்தியுள்ளனர்.

இதனால் அதிமுகவினர் அந்த இடத்திலேயே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பிறகு அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் கொடி ஏற்றி, எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீஸார் இரு கட்சி எம்.எல்.ஏக்கள் உட்பட 604 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.