செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 22 அக்டோபர் 2020 (09:59 IST)

பெரம்பலூர் அருகே கிடைத்த பழங்கால முட்டைகள்; டைனோசர் முட்டைகளா?

பெரம்பலூரில் குளத்தை தூர்வாரியபோது கிடைத்த படிமங்கள் டைனோசர் முட்டையாக இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் அருகே குன்னம் பெரிய ஏரியில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது பல்வேறு புதைபடிமங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் முட்டை போன்ற பெரிய படிமங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவை 12 கோடி ஆண்டுகளுக்கு முன்பாக பூமியில் வாழ்ந்த டைனோசர்களின் முட்டைகளாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து புதைப்படிமங்களை ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஏரியில் கிடைத்த புதைபடிமங்களை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்து வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.