1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : வியாழன், 7 ஜூலை 2016 (06:41 IST)

தமிழகம் முழுவதும் இன்று ரம்ஜான் பண்டிகை - தலைமை ஹாஜி அறிவிப்பு

தமிழகம் முழுவதும் இன்று ரம்ஜான் பண்டிகை

இஸ்லாம் மக்களின் புனித பண்டிகையான ரம்ஜான் பண்டிகை தமிழகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது.
 

 
முஸ்லீம் மக்களின் புனித பண்டிகையான ரமலான் நோன்புக்கான பிறை ஜூன் 6ஆம் தேதி மாலை தென்பட்டது. இதைத் தொடர்ந்து, 7ஆம் தேதி முதல் நோன்பு கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. 
 
இந்த நிலையில், நோன்பு முடிந்து பண்டிகையானது வியாழக்கிழமை கொண்டாடப்படுவதாக தமிழக தலைமை ஹாஜி (ஷியா பிரிவு) சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார்.
 
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.