தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் கிடைக்குமா? அதிமுக மவுனத்தால் பரபரப்பு..!
கடந்த ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில், அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில், தமிழகத்தில் ஆறு ராஜ்யசபா இடங்கள் காலியாக உள்ள நிலையில், ஒரு ராஜ்யசபா சீட் தேமுதிகவுக்கு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
தேமுதிகவுக்கு கண்டிப்பாக ராஜ்யசபா சீட் கிடைக்கும் என்று சமீபத்தில் பிரேமலதா கூறியிருந்தார். ஆனால் இதுவரை அதிமுக சார்பில், தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் வழங்குவது குறித்து எந்தவிதமான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. "ராஜ்ய சபா சீட் கொடுப்பது குறித்து அப்போது பார்த்துக் கொள்ளலாம்," என்று தான் தேர்தலின்போது அதிமுக கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும், தேர்தலின் போது தேமுதிகக்கு 5 எம்பி தொகுதிகள் மட்டுமே ஒதுக்குவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும், அந்த ஒப்பந்தத்தில் ராஜ்யசபா சீட் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை என்றும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Siva