1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 9 செப்டம்பர் 2021 (12:46 IST)

மாநிலங்களவை தேர்தல் தேதி அறிவிப்பு: வெற்றி திமுகவிற்கே!!

தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 2 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு அக்டோபர் 4 ஆம் தேதி தேர்தல் என அறிவிப்பு. 
 
கே.பி.முனுசாமி, ஆர்.வைத்தியலிங்கம் ஆகியோர் ராஜினாமா செய்ததால்  மாநிலங்களவையில் இரண்டு இடங்கள் காலியாக உள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் 2 எம்.பி. இடங்களுக்கு அக்டோபர் 4 ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடத்தப்படும் தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 
 
அக்டோபர் 4 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அன்றைய தினமே வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வரும் 15 ஆம் தேதி வேட்பு மனுத் தாக்கல் தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாள் செப்டம்பர் 22 என விரிவாக தலைமை தேர்தல் ஆணையம் தகவ வெளியிட்டுள்ளது.
 
ஆனால், தமிழக சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏக்கள் 132 பேர் உள்ளனர். கூட்டணி கட்சியினர் பலம் 26 ஆக உள்ளது. எனவே திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வெற்றி பெறுவது இப்போதே உறுதியாகி உள்ளது.