வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 11 ஜனவரி 2021 (11:26 IST)

இப்பவும் வரமாட்டேன்.. எப்பவும் வரமாட்டேன்.. தொல்லை பண்ணாதீங்க! – ரஜினி வேண்டுகோள்!

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் நேற்று போராட்டம் நடத்தியது குறித்து ரஜினிகாந்த் வருத்தம் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்த நிலையில் உடல்நல கோளாறு காரணமாக தனது அரசியல் முடிவை மாற்றிக் கொண்டார். இதுகுறித்து அவர் விரிவான விளக்கம் அளித்த நிலையிலும் அவரது ரசிகர்கள் ரஜினி அரசியலுக்கு வர வேண்டுமென நேற்று வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து நடிகர் ரஜினிகாந்த் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர் “நான் அரசியலுக்கு வருவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சென்னையில் நடந்த போராட்டம் வேதனை தருகிறது. அரசியலுக்கு வர வேண்டுமென்று கூறி என்னை யாரும் வருத்ததிற்கு உள்ளாக்க வேண்டாம். எனது முடிவையும் அதுகுறித்த விளக்கத்தையும் ஏற்கனவே அளித்துவிட்டேன். எனினும் எந்த பிரச்சினையும் இன்றி கட்டுக்கோப்பாக போராடிய ரசிகர்களுக்கு நன்றிகள்” என தெரிவித்துள்ளார்.