திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 6 ஜனவரி 2023 (10:16 IST)

ரஜினியுடன் முதன்முறையாக கைக்கோர்க்கும் மோகன்லால்! – வேற லெவல் போகும் ஜெயிலர்!

Rajini Mohanlal
ரஜினிகாந்த் நடித்து உருவாகி வரும் ‘ஜெயிலர்’ படத்தில் பிரபல மலையாள நடிகர் மோகன்லால் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து தயாராகி வரும் படம் ‘ஜெயிலர்’. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் ரவிசந்தர் இசையமைக்கிறார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்த படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன் நடிப்பதாக செய்திகள் வெளியானது. படையப்பாவுக்கு பிறகு இருவரும் இணைந்து நடிக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோல கன்னட நடிகர் ஷிவ் ராஜ்குமாரும் இந்த படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியானது.

அடுத்தப்படியாக இந்த படத்தில் ஒரு கேமியோ ரோலில் பிரபல மலையாள நடிகர் மோகன்லால் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஜினி – மோகன்லால் இணைந்து நடிப்பது இதுவே முதல்முறை என்பதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழி நடிகர்களும் ஜெயிலர் படத்திற்குள் வந்திருப்பதால் அனைத்து மொழிகளிலும் ஜெயிலர் ஹிட் அடிக்கும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

Edit By Prasanth.K