1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 1 ஜனவரி 2023 (12:51 IST)

’அப்பா’ என அழுத குழந்தை; கள்ளக்காதலுடன் சேர்ந்து கொன்ற தாய்! – ஆந்திராவில் அதிர்ச்சி!

ஆந்திராவில் கள்ளக்காதலுடன் சேர்ந்து பெற்ற மகளை தாயே கொலை செய்து புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் அனந்தபுரி மாவட்டம் கல்யாண துர்கா பகுதியை சேர்ந்தவர் மாருதி நாயக். இவருக்கு கவிதா என்ற பெண்ணுடன் திருமணமாகி 3 மகன்களும் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் மாருதி நாயக்கை சந்திக்க அடிக்கடி அவர் வீட்டுக்கு வந்த வினோத் என்ற நண்பருக்கும், கவிதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ள காதலாக வளர்ந்துள்ளது. மாருதி நாயக் வீட்டில் இல்லாத சமயம் இருவரும் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

கவிதாவின் நடத்தையின்மீது மாருதி நாயக்கிற்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில் அங்கிருந்து வீட்டை காலி செய்துவிட்டு காசிபேட்டை பகுதிக்கு குடி மாறியுள்ளார். இந்நிலையில் கவிதா ஒரு மகன் மற்றும் பெண் குழந்தையுடன் மாயமாகியுள்ளார். கடப்பா மாவட்டத்தில் கவிதாவும், வினோத்தும் தனி வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர்.


இதை கண்டறிந்த மாருதி நாயக் அங்கு சென்று கவிதாவுடன் சண்டையிட்டதுடன் தனது பெண் குழந்தையை கொடுக்குமாறு கேட்டுள்ளார். ஆனால் கவிதா அதற்கு முன்னுக்கு பின்னாக உளறியுள்ளார். இதனால் மாருதி நாயக் போலீஸில் புகார் அளித்துள்ளார். போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் பெண் குழந்தை அப்பாவிடம் போக வேண்டும் என அழுதுக் கொண்டே இருந்ததால் கவிதாவும், கள்ளக்காதலன் வினோத்தும் சேர்ந்து குழந்தையை கழுத்தை நெறித்து கொன்று புதைத்தது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கவிதா, வினோத்தை கைது செய்த போலீஸார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கள்ளக்காதலனுடன் சேர்ந்து பெற்ற குழந்தையை தாயே கொன்று புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit By Prasanth.K