1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 19 ஆகஸ்ட் 2019 (19:13 IST)

கருப்பு பணத்தை காப்பாற்ற மத்திய அரசுக்கு ரஜினி காந்த் ஆதரவு - வேல்முருகன் விமர்சனம்

கருப்பு பணத்தை காப்பற்றவே நடிகர் ரஜினிகாந்த் மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இன்று மயிலாடுதுறையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது :மத்திய அரசு உடனடியாக டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் திட்டங்களான ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களை கைவிட வேண்டும். மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். தமிழக வாழ்வுரிமை கட்சி அணு உலை திட்டம் போன்ற பேரழிவு திட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து போராடும் என்று தெரிவித்தார்.
 
மேலும் ,  காஷ்மீர் விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் மத்திய அரசுக்கு சாதகமான பதிலை தெரிவித்துள்ளார்.  தான் நடிக்கும் படங்களில் வாங்கிவரும் பெரும் கருப்பு பணத்தை குறித்து கேட்காமல் இருக்க வேண்டும் என்பதற்குத்தான் மத்திய - மாநில அரசுகளுக்கு ஆதரவாக ரஜினிகாந்த் குரல்  கொடுத்து வருகிறார். தமிழக மக்கள் தான் அவரை புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதற்கு ரஜியின் ரசிகர்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிறது.