புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 9 ஜூலை 2019 (12:11 IST)

பட்ஜெட்டில் விழுந்தது துண்டு: சரிந்தது பங்குசந்தை

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு நாட்களில் இந்திய பங்கு சந்தை எதிர்பாராத சரிவை சந்தித்து வருகிறது.

கடந்த சனிக்கிழமை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் வர்த்தகர்களுக்கு வருமான வரி பிடித்தம் 4 கோடிக்குமேல் இருப்பவர்களுக்கு 25 சதவீதம் (1கோடி) வரி விதிக்கப்பட்டது. இது செல்வந்தர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் சிறு, குறு தொழில்களுக்கான எளிய முறை கடன்கள், மேலும் பல அடிப்படை வசதிகள் என கஜானாவின் கையிறுப்பை விட அதிகமாக பட்ஜெட் வந்திருப்பதாக பலர் கூறினர்.

இதனால் பங்கு சந்தையின் புள்ளிகள் எதிர்பாராத வீழ்ச்சியை சந்தித்துள்ளன. இரண்டு நாட்களில் சென்செக்ஸ் 793 புள்ளிகள் குறைந்திருக்கிறது. நிப்டி 253 புள்ளிகள் சரிந்திருக்கிறது. இதனால் முதலீட்டாளர்களுக்கு சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.