திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By சினோஜ்கியான்
Last Updated : செவ்வாய், 10 செப்டம்பர் 2019 (14:01 IST)

ரஜினியின் அரசியல் வருகையால் தமிழக கட்சிகளுக்கு அனுகூலமா ...? இல்லை பாதிப்பா ..?

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற இமேஜை எண்பதுகளில் அணியத்தொடங்கிய ரஜினிகாந்துக்கு அப்போதிலிருந்து, இப்போதுவரை ஏறுமுகம் தான். இடையில் சில சறுக்கல்களைச் சந்தித்தாலும் சொந்தப்படம் எடுத்துச் கையைச் சுட்டுக்கொள்ளாமல் சாமர்த்தியமாகத் தன் நடிப்புப் பணியை ஆற்றிவருகிறார்.
இந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டுவாக்கில், தன் அரசியல் அறிவிப்பை அறிவித்த ரஜினியை,தமிழக அரசியல் தலைவர்கள் ரசிக்கவில்லை. ஆனால், தான் முன்வைத்த காலை பின்வைக்க மாட்டேன் என துணிந்து, அடுத்த சட்டசபைத் தேர்தலுக்கு தயாராகிவருவதாகவும் கூறியுள்ளார்.
 
ஊடக்கத்தில் அவரைப் பற்றிய செய்திகள் இல்லாமல் இல்லை. அவர் தாமாகவே பேட்டி கொடுக்கவில்லை என்றாலும், இங்குள்ள திராவிட காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்கள் அவரை விடுவதாக இல்லை. 
சமீபத்தில் பாஜக தலைமை அழைத்தாலும், ரஜினி அந்தக்கட்சிக்குள் செல்ல மாட்டார் என்றார். இந்நிலையில் இன்று, பாஜக மட்டுமல்ல எந்த கட்சிக்கும் செல்ல மாட்டார் என்று தெரிவித்ததாக தகவல்கள் வெளியானது. ரஜினியே தான் கட்சி ஆரம்பிக்கப் போவதாகவும் தனது ரசிகர் மன்றத்தைப் பொறுப்புடன் நடத்தி, அதில் உள்ள உண்மையான ரசிகர்களுக்கு தன் கட்சியில் பொறுப்புகள் வழங்கப்படும் எனவும் கூறியிருந்தார்.
இதற்கிடையே, பாஜக தலைவர்கள் ரஜினிக்கு வலைவிரிப்பதாகவும், அவரை தமிழக பாஜக தலைவராக தேர்ந்தெடுக்க உள்ளதாகவும் பல்வேறு வதந்திகள் உருவானது. இவற்றிற்கு  மறுப்பு தெரிவித்து, தன் டுவிட்டர் பக்கத்தில், ஒரு சுட்டரை எழுதக்கூட நேரமின்றி,முருகதாஸ் இயக்கத்தில், தர்பார் படத்துக்கான படப்பிடிப்பில் ரஜினி பிஸியாக  இருக்கிறார். சினிமாவில் அவருக்கான உயரம் அப்படியேதான் உள்ளது. ஆனால் அரசியல் என்றுவரும் போதுதான்  சற்று யோசிக்கவேண்டியுள்ளது. 
 
காரணம், இதற்கு முன்பு , ரஜினி ஊடகத்திற்கு அளித்த சில  முதிர்ச்சி இல்லாத பேச்சுக்களும் உதாரணம். எனவே பல்வேறு அரசியல் தலைவர்கள் ரஜினியின் அரசியல் வருகையை எதிர்க்கவில்லை என்றாலும் கூட அவரது மக்கள் செல்வாக்கு, ரசிகர் பட்டாளம் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டுதான் அவரது பெயரைக் கட்சிக்குள்(பாஜக ) அடிபடுமாறு செய்கின்றன.
இந்த நிலையில், ரஜினியின் அரசியல் வருகை, தமிழகத்தில் அரசியல் ஆழங்காலூன்றி உள்ள திராவிடக் கட்சிகளுக்கு சவாலாக அமையுமா என்பதை பொருத்திருந்து நிதானமாகப் பார்க்கலாம்.