1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 9 செப்டம்பர் 2019 (17:19 IST)

தீயாக உழைக்க தயாரான தம்பிகள்: அதிரடியில் இறங்கிய சீமான்!!

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என சீமான் தெரிவித்துள்ளார். 

 
விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தலுக்கு திமுக கூட்டணி கட்சிகள் மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகள் தயாராகி வருகின்றன. இக்கட்சிகளின் வரிசையில் தற்போது சீமானின் நாம் தமிழர் கட்சியும் இணைந்துள்ளது. 
 
ஆம், விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆண், பெண் என இரு வேட்பாளர்களை நிறுத்துவோம். 
 
இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்ததும் வேட்பாளர்கள் குறித்த விவரத்தை வெளியிடுவோம் என நா தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கூறினார். 
 
இடைத்தேர்தலில் அதிமுக, திமுக கட்சிகளுக்கு பிறகு வாக்கு வங்கியை பொருத்த வரை மூன்றாவது இடத்தில் உள்ள நாம் தமிழர் கட்சிக்கு இந்த இரண்டு தொகுதிகளும் சாதகமான சூழலை உருவாக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.