அட்றாசக்க..! தர்பாரை தொடர்ந்து மீண்டும் முருகதாஸுடன் ரஜினி?
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று பெருமையோடு அழைக்கப்படும் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கிரைம் திரில்லர் படமான "தர்பார் " படத்தில் நடித்துவருகிறார்.
ரஜினியின் கேரியரில் 166வது படமாக உருவாகிவரும் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க யோகி பாபு காமெடியனாக நடிக்கிறார். அலெக்ஸ் பாண்டியனுக்குப் பின் 25 ஆண்டுகள் கழித்து ரஜினி போலீசாக நடிக்கும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் எதிர்பார்ப்பும் கிடைத்துள்ளது.
இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் புதிய படம் ஒன்றில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியதை அடுத்து தற்போது இன்னொரு சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது. அதாவது, தர்பார் படத்தை தொடர்ந்து மீண்டும் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருப்பதாக கோடம்பாக்கத்தில் முணுமுணுக்கப்படுகிறது. இருந்தாலும் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. ஒரு வேலை இது உண்மையாக இருந்தால் கூடிய விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.