புதன், 10 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 13 ஜூன் 2025 (17:26 IST)

நூற்றுக்கணக்கான ட்ரோன்களை ஏவிய ஈரான்.. இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி..!

இஸ்ரேல் நாடு ஈரான் மீது திடீரென தாக்குதல் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், தற்போது பதிலடியாக ஈரான் இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தி உள்ளதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
'ஆபரேஷன் ரைசிங் லயன்' என்ற பெயரில் இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில், ஈரானின் ராணுவ தளவாடங்கள், அணுசக்தி கட்டமைப்புகள், ராணுவ அலுவலகங்கள் சேதம் ஆகின. மேலும், இந்த தாக்குதலில் ஈரானின் மூத்த தலைமை தளபதி கொல்லப்பட்டார் என்றும், இதனால் இஸ்ரேல் மீது ஈரான் எப்போது வேண்டுமானாலும் பதில் தாக்குதல் நடத்தும் என்றும் கூறப்பட்டது.
 
இந்த நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் சற்றுமுன் நூற்றுக்கணக்கான ட்ரோன்களை ஏவி உள்ளதாகவும், இஸ்ரேலுக்கு இதனால் எந்த அளவுக்குச் சேதம் என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை என்றும் கூறப்படுகிறது. 
 
ஈரான் அனுப்பிய ட்ரோன்கள் அனைத்துமே வலிமை வாய்ந்தது என்றும், அவற்றை இஸ்ரேல் தடுக்கவில்லை என்றால் பெரும் பாதிப்பை சந்திக்க நேரிடும் என்றும் கூறப்படுகிறது. இதனால் ஈரான் - இஸ்ரேல் இடையே போர் பதற்றம் அதிகரித்து உள்ளதால், உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran