வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 9 ஜூன் 2024 (08:31 IST)

ஆட்டநாயகன் ராகுல் காந்தி தான்.. எதிர்க்கட்சி தலைவர் பதவி அவருக்கு தான்: சசிதரூர்

நடைபெற்ற முடிந்த பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியில் உள்ள 36 கட்சிகளும் சேர்ந்து பாஜக தனியாக ஜெயித்த தொகுதிகளின் எண்ணிக்கை பெறவில்லை என்ற நிலையில் ஆட்டநாயகன் ராகுல் காந்தி தான் என்றும் அவர்தான் எதிர்க்கட்சித் தலைவருக்கு பொருத்தமானவர் என்றும் திருவனந்தபுரம் எம்பி ஆக பதவி ஏற்க இருக்கும் சசிதரூர் தெரிவித்துள்ளார். 
 
இது குறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறிய போது ’மல்லிகார்ஜுனே கார்கே மாநிலங்களவையில் எதிர்க்கட்சியாக இருந்து வழிநடத்தி வருகிறார். அதேபோல் மக்களவையில் அரசை எதிர்க்க காங்கிரஸ் கட்சியிடம் தற்போது வலுவான எண்ணிக்கை உள்ளது. எனவே எதிர்கட்சித் தலைவர் பதவிக்கு சந்தேகத்திற்கு இடமின்றி ராகுல் காந்தி தான் வருவார். அவர் அந்த பதவிக்கு மிகவும் பொறுப்பாக பொருத்தமாக இருப்பார். மேலும் இந்த தேர்தலில் அவர் தான் ஆட்டநாயகன்’ என்று தெரிவித்துள்ளார். 
 
காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட்டு வரும் நிலையில் மக்களவையில் ராகுல் காந்தி மற்றும் சசிதரூர் ஆகிய இருவரில் ஒருவர் எதிர்க்கட்சித் தலைவராக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் சசிதரூர் தற்போது ராகுல் காந்தி தான் அந்த பதவிக்கு பொருத்தமானவர் என்று கூறி இருப்பதை எடுத்து ராகுல் காந்தி எதிர்க் கட்சி தலைவராக தேர்வு செய்யப்படுவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
Edited by Siva