புதன், 9 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 8 ஜூன் 2024 (12:10 IST)

ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டி தலைவர் மறைவு: முதலவர் ஸ்டாலின், ரஜினிகாந்த் இரங்கல்

ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டி தலைவர் ராமோஜிராவ் காலமானதை அடுத்து தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ராமோஜிராவ் பிலிம் சிட்டி, ஈடிவி தொலைக்காட்சிகள் மற்றும் ஈநாடு பத்திரிகைகள் உட்பட பல நிறுவனங்களை நடத்தி வந்தவர் ராமோஜிராவ். ஆந்திர மாநிலத்தின் மிகப்பெரிய தொழிலதிபரான இவர் சமீபத்தில் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு தேவர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்று இரவு அவரது உடல் மோசமானதை அடுத்து இன்று காலை அவர் சிகிச்சையின் பலன் இன்றி காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமோஜிராவ் மறைவு செய்து வெளியானவுடன் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, குஷ்பூ, ஷங்கர் உள்பட பல திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்தனர். மேலும் ராமோஜிராவ் மறைவு குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனது சமூக வலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். தொழில்துறை, பத்திரிகை துறை என அவரது பங்களிப்பு மிகச் சிறந்ததாக இருந்தது என்றும் அவரது புகழ் என்றும் நிலைத்திருக்கும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தனது இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Edited by Mahendran