சென்னையில் ஊரடங்கு தளர்வு எப்படி இருக்கு??
தமிழகத்தில் கொரோனா தொற்றுகள் 1 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வந்தது.
இதனால் சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களான காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகியவற்றில் கடந்த சில வாரங்களாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அனைத்து பகுதிகளும் மூடப்பட்டன. தற்போது தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
சென்னையில் இந்த தளர்வுகளுக்கான நேரம் என்னென்ன என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள். சென்னையில் ஊரடங்கு தளர்வின் படி,
ஐ.டி. நிறுவனங்கள் 50 சதவீத தொழிலாளர்களுடன் இயங்கலாம்.
வணிக வளாகங்களை தவிர்த்து அனைத்து வகையான ஷோரூம்கள், பெரிய கடைகள் (ஜவுளி மற்றும் நகைக் கடைகள்) காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கும்.
ஹோட்டல்கள் மற்றும் ரெஸ்டாரண்டுகள் காலை 6 மணி முதல் 9 மணி வரை உணவுகளை பார்சல் வழங்கலாம்.
போன்கள் மூலம் பெறப்படும் ஆர்டர்களுக்கு வீடுகளுக்கு கொண்டு கொடுக்கும் சேவையை இரவு 9 மணி வரை மேற்கொள்ளலாம்.
காய்கறி மற்றும் மளிகை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்து இருக்கும்.
டாக்சிகளில் ஓட்டுனர் தவிர்த்து 3 நபர்கள் பயணிக்கலாம்.
முடி திருத்தும் நிலையங்கள், ‘ஸ்பா‘ மற்றும் அழகு நிலையங்கள் ஏ.சி. போடாமல் இயங்கலாம்.
மீன் கடைகள், கோழிக்கறி மற்றும் இறைச்சி கடைகள் சமூக இடைவெளியை கடைபிடித்து இயங்கலாம்.
கோவில்கள் அடுத்த உத்தரவு வரும் வரை திறக்கப்படாது.