வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 6 ஜூலை 2020 (12:18 IST)

11,12 ம் வகுப்பு; புதிய பாடத்தொகுப்பு ரத்து! – தமிழக அரசு அரசாணை!

தமிழகத்தில் 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டங்களை ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தற்போது தமிழக அரசின் பாடத்திட்டத்தின்படி தமிழ், ஆங்கிலம் பாடங்களை தவிர துறை ரீதியான 4 பாடங்கள் சேர்த்து ஆறு பாடங்கள் கொண்ட 600 மதிப்பெண் முறை நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் புதிய பாடத்தொகுப்பாக 500 மதிப்பெண்கள் கொண்ட 3 பாடங்கள் கொண்ட திட்டத்தை தமிழக அரசு வரும் கல்வியாண்டில் நடைமுறைப்படுத்த திட்டமிட்டிருந்தது.

தற்போது கொரோனா காரணமாக பல்ளி திறப்பு தள்ளி போவதால் காலாண்டு தேர்வுகள் ரத்து செய்தல், பாடத்திட்டங்களை குறைத்தல் போன்றவை குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் புதிய பாடத்தொகுப்பிற்கு அனுமதி பெறாமலே பல தனியார் பள்ளிகள் அட்மிசனை தொடங்கி விட்டதாகவும் புகார்கள் எழுந்தன. மேலும் இந்த இக்கட்டான சூழலில் புதிய பாடத்தொகுப்பை அறிமுகப்படுத்துவது மாணவர்களுக்கு மேலும் சிக்கிலை உண்டாக்கும் எனவும் பலர் கருத்து கூறி வந்தனர்.

இந்நிலையில் புதிய பாடத்தொகுப்பை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பழைய பாடத்தொகுப்பு முறைப்படி 4 பாடங்கள் கொண்ட தொகுப்பே அமலில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.