வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 1 அக்டோபர் 2024 (11:35 IST)

ICU-வில் ரஜினிகாந்த்? ஆஞ்சியோ சிகிச்சை..! - தற்போது எப்படி இருக்கிறார்?

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

 

 

பிரபல நடிகரான ரஜினிகாந்த் நேற்று இரவு உடல்நலக் கோளாறு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு செரிமான பிரச்சினை, சீரற்ற ரத்த ஓட்டம் பிரச்சினை உள்ளதாக தகவல்கள் வெளியானது.

 

அதன்பின்னர், அவருக்கு ரத்த நாள அடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கான அதிநவீன ஆஞ்சியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியானது.
 

 

இந்நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்திற்கு ஆஞ்சியோபிஸ்ட் சிகிச்சை நடந்து முடிந்துள்ளதாகவும், தற்போது ஐசியு வார்டில் அவர் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அடுத்த 24 மணி நேரம் கழித்து சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவார் எனவும், பின்னர் சில பரிசோதனைகளுக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

 

இதுகுறித்து மருத்துவமனை அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விளக்கத்தை வெளியிடுவார்கள் என ரஜினியின் ரசிகர்கள் படபடப்புடன் காத்திருக்கின்றனர்.

 

Edit by Prasanth.K