1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 27 டிசம்பர் 2020 (16:52 IST)

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்: சென்னை வருகிறார் ரஜினிகாந்த்!

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்: சென்னை வருகிறார் ரஜினிகாந்த்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் சற்று முன் அவர் டிஸ்சார்ஜ் செய்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக கடந்த 25ஆம் தேதி ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருந்த ரஜினிகாந்த் சற்று முன்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதனையடுத்து அவர் மருத்துவமனையில் இருந்து விமான நிலையம் புறப்பட்டுச் சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது 
 
மருத்துவமனையிலிருந்து வெளியே வந்து விமான நிலையம் புறப்பட்டுச் செல்லும் போது ரஜினிகாந்த் காரிலிருந்து ரசிகர்களை நோக்கி கையசைத்து புகைப்படமும் வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது. இன்னும் சற்று நேரத்தில் விமானம் மூலம் சென்னை அவர் திரும்புவார் என்றும் சென்னையில் அவர் தனது போயஸ் கார்டன் வீட்டில் ஒரு வாரம் முழுமையாக ஓய்வு எடுப்பார் என்றும் கருதப்படுகிறது
 
மேலும் திட்டமிட்டபடி வரும் 31ம் தேதி அவர் அரசியல் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும் ஆனால் அவர் தனது டுவிட்டரிலேயே அரசியல் அறிவிப்பை வெளியிடுவார் என்றும் கட்சி தொடங்கும் தேதியை குறிப்பிடுவார் எதிர்பார்க்கப்படுகிறது