1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 27 டிசம்பர் 2020 (11:26 IST)

ரஜினி டிஸ்சார்ஜ் செய்யப்படுவது எப்போது? மருத்துவமனை நிர்வாகம் தகவல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக நேற்று முன்தினம் ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது தெரிந்ததே. அவருக்கு கடந்த இரண்டு நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
இந்த நிலையில் ஐதராபாத்தில் அப்பல்லோ அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்படுவது எப்போது என்பது குறித்த முடிவை இன்று பிற்பகலில் மருத்துவர்கள் எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
மருத்துவ பரிசோதனை முடிவுகளில் ரஜினி உடல்நலம் குறித்து அச்சப்படும் வகையில் எதுவும் இல்லை என்று மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. ஏற்கனவே ரஜினியின் சகோதரர் சத்யநாராயண அவர்கள் இன்று பிற்பகலில் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறி இருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் தற்போது அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் அவரது டிஸ்சார்ஜ் எப்போது என்பதை இன்று பிற்பகலில் முடிவு செய்ய உள்ளனர். அனேகமாக இன்று மாலைக்குள் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது