திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 24 ஏப்ரல் 2018 (08:02 IST)

என்ன தான் சாக்குபோக்கு சொன்னாலும் எஸ்.வி.சேகர் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் - ரஜினிகாந்த்

பெண் பத்திரிக்கையாளர்களை கீழ்த்தரமாக பேசிய எஸ்.வி சேகர் குறித்து செய்தியாளர் சந்திப்பில் நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் முழு உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா செல்லும் முன் போயஸ் கார்டனில் உள்ள அவருடைய வீட்டின் முன்பு நேற்று இரவு நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
 
அப்போது பெண் பத்திரிக்கையாளர்களை கீழ்த்தரமாக பேசிய எஸ்.வி சேகர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
 
இதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், எஸ்.வி.சேகர் என்ன தான் இதற்கு விளக்கம் அளித்தாலும் அவர் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் என்றார். 
மேலும் பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் ரொம்ப வெட்கப்பட வேண்டிய விஷயம் என்றும் விசாரணையில் குற்றம் நிரூபனமானால் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்றார். 
 
உங்கள் மீது அதிக விமர்சனங்கள் வருவதை எப்படி பார்க்கிறீர்கள் என்று கேட்ட கேள்விக்கு, அரசியல் என்றால் விமர்சனம் இருக்கத்தான் செய்யும். பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டால் விமர்சனத்தை தவிர்க்கவே முடியாது என ரஜினி பதிலளித்தார்.