வாஸ்து: கிணறு அமைக்கும் முறை
வாஸ்து விதி படி ஒரு இடத்தில் ஆழ்துளை கிணறு அல்லது கிணறு அமைக்கும் முறை
ஒரு மனை எந்த திசையை பார்த்து இருந்தாலும் அந்த மனையில் கட்டாயம் ஆழ்துளை கிணறு அல்லது கிணறு வடகிழக்கு பகுதியில் தான் வரவேண்டும்.
ஒரு இடத்திற்கு பூமி பூஜை செய்த உடன் ஆழ்துளை கிணறு அல்லது கிணறு தோண்டுவது மிகவும் நல்லது.
ஒரு இடத்தின் வடகிழக்கு பகுதியில் வடக்கு அல்லது கிழக்கு திசையில் கட்டிடத்தின் தாய்சுவரையும், மதில்சுவரையும் ஒட்டாமல் அமைக்க வேண்டும்.
ஒரு கட்டிடத்திற்குள் கிணறோ அல்லது ஆழ்துளை கிணறோ கண்டிப்பாக அமைக்ககூடாது.
மேலும் ஒரு இடத்தின் வடமேற்கு, தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு பகுதியில் கட்டாயம் அமைக்ககூடாது.