வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 22 மே 2018 (13:46 IST)

ஸ்டெர்லைட் போராட்டம் வன்முறை எதிரொலி: முதல்வர் அவசர ஆலோசனை

தூத்துகுடியில் இன்று ஸ்டெர்லைட் போராட்டக்காரர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட உள்ளதாக அறிவித்திருந்ததால் கலெக்டர் அலுவலகத்திற்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இருப்பினும் போராட்டக்காரர்களின் எண்ணிக்கை அதிகம் இருந்ததால் போலீசார்களால் அவரகளை கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே தடையை மீறி கலெக்டர் அலுவலகத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் கலெக்டர் அலுவலக கண்ணாடிகளை உடைத்தும், அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு தீவைத்தனர். இதனால் வேறு வழியின்றி தடியடி மற்றும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் ஒருவர் பரிதாபமாக பலியானார்.
 
இந்த நிலையில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் வன்முறையாக மாறியது குறித்து முதலமைச்சர் பழனிசாமி காவல் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசானையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், டிஜிபி, உயர் அதிகாரிகள் ஆகியோர்கள் பங்கேற்றுள்ளனர். ஸ்டெர்லைட் விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து முக்கிய ஆலோசனையில் இவர்கள் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் தூத்துக்குடியில் காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காதது கண்டனத்திற்குரியது என்றும், ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.