வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 5 ஏப்ரல் 2019 (21:24 IST)

திமுக வெற்றி பெற்றால் அரசியலுக்கு வரமாட்டாரா ரஜினி?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவிருப்பதாக அறிவித்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகியும் இன்னும் அவர் அரசியல் கட்சி ஆரம்பிப்பதற்கான அறிகுறியே தெரியவில்லை. அவருடைய தயக்கத்திற்கு மிகப்பெரிய காரணம், வந்தால் வெற்றி பெற வேண்டும் என்பதுதான். அதற்கான சரியான தருணத்தை அவர் காத்திருப்பதாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் வரும் மக்களவை தேர்தல் முடிவை பொருத்தே ரஜினி அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்பது தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் திமுக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று, இடைத்தேர்தலிலும் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்றே கூறப்படுகிறது
 
திமுக எதிர்ப்பு ஓட்டுக்களை மொத்தமாக கவரவேண்டும் என்பதே ரஜினியின் திட்டமாக இருந்தது. ஆனால் திமுக வரும் தேர்தலில் நல்ல வெற்றியை பெற்றால் தனக்கு வெற்றி வாய்ப்பு குறைவு என்றே ரஜினி கருதுகிறாராம். அதேபோல் கமலுக்கு மக்கள் அளிக்கும் ஆதரவு எவ்வளவு என்பதையும் அவர் உன்னிப்பாக கவனிக்க இருக்கின்றாராம். 
 
ஒருவேளை அரசியலுக்கு வரவில்லை என்றால் இளம் இயக்குனர்களுடன் இணைந்து வருடத்திற்கு இரண்டு படங்களில் நடிக்கும் ஐடியாவில் இருக்கின்றாராம் ரஜினி