திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. வேட்பாளர்கள் பேட்டிகள்
Written By
Last Modified: வெள்ளி, 5 ஏப்ரல் 2019 (17:30 IST)

தமிழிசைக்கு ஆதரவாக பிரசாரம் செய்த பிரபல நடிகர்

வரும் மக்களவைத் தேர்தலுக்காக அனைத்து கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு மக்களைக் கவரும் வகையில் பல வாக்குறுதிகள் அளித்து பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.பாஜக தமிழகத்தில் அதிமுகவுடன் மெகா கூட்டணி வைத்துள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் தமிழிசை சவுந்தரராஜனை ஆதரித்து நடிகர் கார்த்திக் பிரசாரம் செய்தார்.
 
அப்போது அவர் பேசியதாவது : 
 
மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் நாட்டு வளம் பெறச் செய்ய வேண்டும். முக்கியமாக கறுப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும் நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்து நாடு முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற எண்ணங்கள் எதிரணிக்கு இல்லை. இவ்வாறு பேசினார்.