திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Updated : திங்கள், 17 பிப்ரவரி 2020 (14:59 IST)

ரஜினி முதல்வர் நாற்காலியில் அமர வேண்டும் ! - தமிழருவி மணியன் !

234 தொகுதிகளிலும் ரஜினி தனித்து போட்டிடுவார் என காந்திய மக்கள் இயக்க தலைவர் மணியன் தெரிவித்துள்ளார்.
 
ரஜினிகாந்த் தனது அரசியல் வருகையை உறுதிப்படுத்திய பிறகு அவரை வரவேறு ஒருசாராரும், அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒரு சாராரும் விமர்சித்து வருகின்றனர். சமீபத்தில் தனது வீட்டில் பேட்டி கொடுத்த ரஜினி, சிஏஏவால் மக்களுக்கு பாதிப்பில்லை எனவும்,  முஸ்லிம்களுக்கு எதாவது பிரச்சனை என்றால் நானே வீதிக்கு வந்து போராடுவேன் என தெரிவித்த நிலையில், வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் சிஏஏவை எதிர்த்து போராட்டத்தி ஈடுபட்டனர். 
 
அதற்கு, இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது,  ரஜினி குரல் எழுப்பாததற்காக நெட்டிசன்கள் விமர்சனம் தெரிவித்தனர்.
 
இந்நிலையில், காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கை என்ற நூல் விழா நடைபெற்றது. அப்ப்போது அவர்  கூறியதாவது, நான் ரஜினியை ஆதரிப்பதும், அவரை முதல்வராக்க எனது அறிவை ஆற்றலைப் பயன்படுத்துவது எதற்காக என அனைவரும் யோசிக்க வேண்டும். ஆட்சி நாட்காலியில் அமருபவர் துறவிபோல் இருக்கவேண்டும், முதல்வர் முதல்வர் நாற்காலியில் அமர வேண்டும் என என்பது எனது ஆசை என தெரிவித்துள்ளார்.
 
மேலும், ரஜினி 234 தொகுதிகளிலும் போட்டியிடுவர். ஆனால் யாருடனும்  அவர் கூட்டணி வைக்க மாட்டார் என தெரிவித்துள்ளார்.