செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 16 பிப்ரவரி 2020 (18:07 IST)

தனுஷ் மட்டும் அதை செய்தால் கேஸ் போடுவேன் – மூத்த இயக்குனர் மிரட்டல் !

தனுஷ்

தனுஷ் தன்னுடைய அனுமதி இல்லாமல் நெற்றிக்கண் படத்தை எடுத்தால் அவர் மேல் வழக்குத் தொடர்வேன் என இயக்குனர் விசு தெரிவித்துள்ளார்.

ரஜினி, சரிகா மற்றும் மேனகா அகியோர் நடிப்பில் 1981 ஆம் வருடம் வெளியானத் திரைப்படம் நெற்றிக்கண். இயக்குனர் எஸ் பி முத்துராமன் இயக்கிய இந்த படத்தில் ரஜினி பெண் பித்தனாக நடித்திருந்த கதாபாத்திரம் ரஜினிக்கு பெயர் வாங்கிக் கொடுத்த கதாபாத்திரங்களுள் ஒன்று.

இந்நிலையில் வெளியாகி 39 ஆண்டுகள் கழித்து இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. இதில் ரஜினி கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருக்கிறார். மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் விவரம் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

நெற்றிக்கண் படத்தை கவிதாலயா நிறுவனம் தயாரித்திருந்தது. இதனால் படத்துக்கான உரிமையை தனுஷ் தரப்பில் கவிதாலயாவில் கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் படத்தின் கதாசிரியரான விசுவோ, தன்னுடைய அனுமதி இல்லாமல் அந்த படத்தை எடுத்தால் தனுஷ் மேல் வழக்குத் தொடர்வேன் என மிரட்டல் விடுத்துள்ளார்.