திமுக-அதிமுக ரெண்டும் ஒன்னுதான்; தமிழருவி மணியன்..
திமுக – அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார்.
காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் தான் எழுதிய ”வழிப்போக்கனின் வாழ்க்கை” என்னும் நூலை நேற்று திருப்பூரில் வெளியிட்டார். இதனை அடுத்து அவ்விழாவில் பேசிய அவர், “காமராஜரின் 9 ஆண்டுகால ஆட்சியை நேரில் பார்த்தவன் நான். அப்படிப்பட்ட நான் ரஜினியை ஆதரிப்பது எதற்காக என யோசிக்க வேண்டும். ஆட்சி நாற்காலியில் இருப்பவர் துறவி போலவும், பொதுச் சொத்தின் மேல் கைவைக்காதவராகவும் இருக்க வேண்டும். அதற்கு தான் ரஜினி ஆட்சிக்கு வரவேண்டும் என ஆசைப்படுகிறேன்” என்று கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், “திமுக-அதிமுக ஆகிய இரண்டுக்கும் எந்த வித வேறுபாடும் இல்லை. ஸ்டாலின் அரசியல் நாடகம் நடத்துகிறார்” எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.