ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 31 மார்ச் 2021 (00:15 IST)

ரஜினி மக்கள் மன்றத்தினர் திமுகவில் இணைந்தனர்

ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த சுமார் 150க்கும் மேற்பட்டோர்  முதுகுளத்தோர் தொகுதி வேட்பாளர் ராஜகண்ணப்பன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல்  6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், அமமுக, ம.நீ,.ம , பாஜக போன்ற கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டன,.
தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த சுமார் 150க்கும் மேற்பட்டோர்  முதுகுளத்தோர் தொகுதி வேட்பாளர் ராஜகண்ணப்பன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட முந்தல், மாரியூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ரஜினி மன்றத்தினர் இன்று அத்தொகுதில் திமுக சார்பில் போட்டியிடும் ராஜகண்ணப்பன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.