ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 30 மார்ச் 2021 (16:47 IST)

பிரபல நடிகர் இயக்குநர் அவதாரம்….ரசிகர்கள் ஆச்சர்யம் !

தமிழ் சினிமாவில் அட்டகத்தி என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் பா.ரஞ்சித். இப்படத்தில் நடிகர் தினேஷ் ஹீரோவாக நடித்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து நடிகர் தினேஷுக்கு பட வாய்ப்புகள் குவிந்தது. குறிப்பாக குக்கூ, விசாரணை, கபாலி,  ஒருநாள் கூத்து உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

இந்நிலையில், அட்டகத்தி தினேஷ் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். இதுகுறித்த தகவல் பரவலாகிவருகிறது.
நடிகர் தினேஷ் வயிறுடா என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகவுள்ளார். இதுகுறித்த போஸ்டரை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். விரையில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் எனத்தெரிகிறது.