செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 25 நவம்பர் 2018 (09:17 IST)

நெருங்கிய நண்பரின் மறைவால் கடும் அப்செட்டான ரஜினிகாந்த

பிரபல கன்னட நடிகரும் அரசியல்வாதியுமான அம்ரிஷ் நேற்றிரவு உடல்நலக்குறைவால் காலமானாதைக் கேட்டு ரஜினி அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.
நடிகர் அம்பரீஷ்(66) கன்னட திரையுலகில் மிகப்பிரபலமான நடிகர் ஆவார் . இவர் நடிகர் மட்டுமில்லாது அரசியலிலும் நிழநிது ஒரு கலக்குகலக்கியவர். இவர் மத்திய மற்றும் மாநில அமைச்சராக இருந்துள்ளார். இவர் ரஜினியுடன் பிரியா, இது நிஜமா ஆகிய படங்களில் நடித்துள்ளார். இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆவர்.
சமீப காலமாக இவரது உடல்நிலை சரியில்லாமல் போனது. இதற்காக அவர் அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
 
இந்நிலையில் நேற்று இரவு அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவரை உடனடியாக பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.
இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அம்பரீஷின் மறைவைக்கேட்டு ரஜினி அதிர்ச்சியடைந்தார்.  மனிதநேயமிக்க, என் நெருங்கிய நண்பரான அம்பரீஷை  இழந்து விட்டேன். அவரது ஆத்மா சாந்தி அடைய வேண்டும். அம்ரிஷை பிரிந்து வாடும் அவரது கும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என ரஜினி தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இவரது மறைவிற்கு பல்வேறு நடிகர்களும் திரைத்துறை பிரபலங்களும், கட்சி பிரமுகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.