செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 12 நவம்பர் 2018 (15:05 IST)

200 பேரை காவு வாங்கிய எபோலா வைரஸ்

ஆப்பிரிக்காவில் எபோலா வைரஸ் பாதிப்பால் 200 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஆப்பிரிக்க நாடான காங்கோவில் 300க்கும் பேற்பட்டோர் எபோலா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். எபோலா வைரஸ் என்பது  ரத்த இழப்பு சோகைக் காய்ச்சல் ஆகும். இது விலங்குகளிலிருந்து பரப்படும் நோயாகும்.
 
இந்த வைரசால் தாக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்கள். இந்நிலையில் 200 பேர் எபோலா வைரசால் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.