செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 14 நவம்பர் 2018 (09:33 IST)

திருமணம் ஆன இரண்டாவது நாளில் மனப்பெண் விஷம் குடித்து மரணம்

தேனி மாவட்டத்தில் உள்ள புலிக்குத்தி கிராமத்தைச் சேர்ந்த ரம்யா என்ற பெண் திருமணமாகி 2 வது நாளில் விஷம் குடித்து உயிரிழந்தார்.

ரம்யா தேனி மாவட்டத்த்தில் உள்ள ஒரு தணியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை. அவருக்கு 2 நாட்களுக்கு முன்னர் பெரியகுளத்தைச் சேர்ந்த ரெங்கராஜ் என்பவரோடு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர்.

திருமணம் முடிந்து 2 நாட்கள் ஆகியுள்ள நிலையில் ரம்யாவும் அவரது கணவர் ரங்கராஜும் ரம்யாவின் தாய் வீட்டிற்கு விருந்திற்கு வந்துள்ளனர். தாய் வீட்டில் விருந்தை முடித்து விட்டு ரம்யாவின் சித்தப்பா முத்துக்கிருஷ்ணன் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

சித்தப்பா வீட்டின் வாசலில் முத்துக்கிருஷ்ணனோடு பேசிக் கொண்டிருந்த ரம்யா மயக்கம் போட்டு விழுந்துள்ளார். அடுத்த சில நிமிடங்களிலேயே முத்துக்கிருஷ்ணனும் மயக்கம் போட்டு விழிந்துள்ளார். இருவரையும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று பரிசோதித்த போது இருவரும் விஷம் குடித்திருப்பது தெரிய வந்தது.

மருத்துவர்களின் சிகிச்சைப் பலனளிக்காமல் ரம்யா மருத்துவமனையிலேயே இறந்துள்ளார். முத்துக்கிருஷ்ணன் இன்னும் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளார். இருவரும் விஷம் குடித்ததற்கானக் காரணம் இன்னும் தெரியவில்லை எனப் பெற்றோர் தரப்பிலிருந்து கூறியுள்ளனர்.