செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 9 டிசம்பர் 2020 (15:02 IST)

அண்ணாத்த படக்குழுவுக்கு பயோ பபுள் – சன் பிக்சர்ஸ் அதிரடி திட்டம்!

அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்க பட வுள்ள நிலையில் படக்குழுவினர் அனைவரையும் ஒருங்கிணைத்து பயோ பபுளை உருவாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

பல வருடங்களாக கன்னித்தீவு போல இழுத்துக் கொண்டிருந்த ரஜினியின் அரசியல் வருகை இப்போது உறுதியாகியுள்ளது. ஜனவரி மாதம் கட்சி ஆரம்பித்து சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது உறுதி என்றும் ரஜினி அறிவித்துள்ளார். மேலும் இது குறித்து பேசிய அவர் அண்ணாத்த படத்தை முடித்துக் கொடுக்க வேண்டியது தனது கடமை எனவும் கூறியுள்ளார்.

இதனால் அண்ணாத்த படம்தான் அவரின் கடைசி படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. ரஜினிகாந்தின் வயது மற்றும் உடல்நிலை காரணமாக அரசியல் மற்றும் சினிமா என இரட்டைக் குதிரையில் அவரால் பயணிக்க முடியாது என்பதால் அவர் சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிடலாம் என்ற முடிவில் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் டிசம்பர் 15 ஆம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. கொரோனா அச்சம் அதிகமாக உள்ள நிலையில் படக்குழுவினர் அனைவரையும் உள்ளடக்கிய பயோபபுள் உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது. ஐபிஎல் தொடரில் சன் நிறுவனத்தின் சன் ரைசர்ஸ் ஹைதரபாத் அணிக்கு இதே போல பயோ பபுள் உருவாக்கி கலந்து கொள்ள வைத்ததைப் போல இப்போது அண்ணாத்த படக்குழுவுக்கு பயோபபுள் உருவாக உருவாகிறது.